அண்மையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட், 21 ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் செலுத்தியது. ஆனால், தரையிறக்கத்தின் போது எதிர்பாராத விதமாக வெடித்தது. நல்வாய்ப்பாக, இந்த விபத்தால் உயிரிழப்புகள் எதுவும் நேரவில்லை. அதைத் தொடர்ந்து, ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) ராக்கெட்டை நிறுத்தி விசாரணையைத் தொடங்கியுள்ளது.
FAA, ஸ்பேஸ் எக்ஸின் கண்டுபிடிப்புகள் மற்றும் திருத்த நடவடிக்கைகளை அங்கீகரித்த பின்னர், ஏவுதலை மீண்டும் தொடங்க அனுமதிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் போலாரிஸ் டான் போன்ற எதிர்கால விண்வெளி திட்டங்கள் இதனால் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.