சிவகாசி பட்டாசு ஆலையின் தொழிற்சாலை உரிமம் ரத்து

சிவகாசியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். 14 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நேற்று முன்தினம் பட்டாசு ஆலையில் விதி மீறல் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வேலை பார்த்த பத்து பேர் பலியாகினார். மேலும் 14 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அந்த பட்டாசு தொழிற்சாலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு […]

சிவகாசியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். 14 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நேற்று முன்தினம் பட்டாசு ஆலையில் விதி மீறல் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வேலை பார்த்த பத்து பேர் பலியாகினார். மேலும் 14 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அந்த பட்டாசு தொழிற்சாலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வெடிபொருள் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu