டெல்லியில் விவசாயிகள் பேரணி இன்று மீண்டும் தொடக்கம்

டெல்லியில் டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள் பேரணி நடத்தி வந்தனர். வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாய விலையை நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி நோக்கி டெல்லி சலோ என்ற பெயரில் பேரணியை தொடங்கினர். ஆனால் டெல்லிக்குள் நுழைய முடியாதபடி அரியானா, பஞ்சாப் மாநில எல்லையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து கடந்த 21ஆம் தேதி டெல்லியில் எல்லையில் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதில் 21 வயதான விவசாயி பரிதாபமாக […]

டெல்லியில் டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள் பேரணி நடத்தி வந்தனர்.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாய விலையை நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி நோக்கி டெல்லி சலோ என்ற பெயரில் பேரணியை தொடங்கினர். ஆனால் டெல்லிக்குள் நுழைய முடியாதபடி அரியானா, பஞ்சாப் மாநில எல்லையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து கடந்த 21ஆம் தேதி டெல்லியில் எல்லையில் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதில் 21 வயதான விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் எனவும் அதுவரை அவரது உடலை வாங்க மாட்டோம் எனும் விவசாய சங்கங்கள் தெரிவித்திருந்தன. இதனை ஒட்டி ஒரு வாரம் கழித்து பஞ்சாப் மாநில போலீஸ் கொலை வழக்காக பதிவு செய்தது. மேலும் பேரணி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக விவசாய சங்கம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இன்று முதல் மீண்டும் பேரணி பிரமாண்ட முறையில் தொடங்கி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu