உரையாடல்களை நினைவில் வைத்துக் கொள்ளும் புதிய அம்சம் - சாட் ஜிபிடி யில் அறிமுகம்

February 15, 2024

சாட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவு கருவியில் புதிய அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பயனர்கள் சாட் ஜிபிடி இடம் கேட்ட கேள்விகள் மற்றும் நிகழ்த்திய உரையாடல்கள் அனைத்தும் நினைவில் வைத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களுடன் ஏற்பட்ட உரையாடல்களை நினைவில் வைத்துக் கொள்வதன் மூலம், தனித்தன்மை வாய்ந்த உரையாடலை வழங்க முடியும். அத்துடன், பயனர்கள் எதிர்பார்க்கும் சரியான பதிலை அளிக்கும் திறன் அதிகரிக்கும். எனவே, இந்த புதிய அம்சம் கொண்டு வரப்படுகிறது. தற்போதைய நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டும் பரிசோதனை […]

சாட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவு கருவியில் புதிய அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பயனர்கள் சாட் ஜிபிடி இடம் கேட்ட கேள்விகள் மற்றும் நிகழ்த்திய உரையாடல்கள் அனைத்தும் நினைவில் வைத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்களுடன் ஏற்பட்ட உரையாடல்களை நினைவில் வைத்துக் கொள்வதன் மூலம், தனித்தன்மை வாய்ந்த உரையாடலை வழங்க முடியும். அத்துடன், பயனர்கள் எதிர்பார்க்கும் சரியான பதிலை அளிக்கும் திறன் அதிகரிக்கும். எனவே, இந்த புதிய அம்சம் கொண்டு வரப்படுகிறது. தற்போதைய நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டும் பரிசோதனை அடிப்படையில் இது வழங்கப்பட்டுள்ளது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும். இந்த அம்சம் சாட் ஜிபிடி பிளஸ் சந்தாதாரர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமனதாக கிடைக்கப்பெறும். அதே சமயத்தில், இது முழுக்க முழுக்க பயனர்களின் விருப்பத்தை பொறுத்தது. ஒருவேளை, பயனர்களுக்கு உரையாடல்களை நினைவில் வைத்துக் கொள்ளும் பயன்பாடு தேவையில்லை என்றால், அதனை நீக்கிக் கொள்ளலாம். - இவ்வாறு ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu