கேரள மாநிலத்தில் மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

March 28, 2024

கேரள மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. பாராளுமன்ற தேர்தல் மாநிலங்களில் ஏழு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. இதில் இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளாவில் தேர்தல் நடைபெறுகிறது. மேலும் இங்குள்ள 20 மக்களவை தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்றுமுதல் ஏப்ரல் 4ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் தொடங்குவதாகவும், வருகிற 29, 31 மற்றும் 1ஆம் தேதி […]

கேரள மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் மாநிலங்களில் ஏழு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. இதில் இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளாவில் தேர்தல் நடைபெறுகிறது. மேலும் இங்குள்ள 20 மக்களவை தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்றுமுதல் ஏப்ரல் 4ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் தொடங்குவதாகவும், வருகிற 29, 31 மற்றும் 1ஆம் தேதி பொது விடுமுறை நாட்கள் ஆகவும், அவற்றை தவிர மற்ற நாட்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேர்தல் அதிகாரிகளிடம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று மனு தாக்கல் செய்யும் அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 5ம் தேதி நடைபெறும். வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் 8ம் தேதி ஆகும். அதன் பின்னர் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வெளியிடப்படும். மேலும் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 26 ஆம் தேதி அன்று கேரள மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu