தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வு தேதி அறிவிப்பு

March 21, 2024

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கான இறுதித் தேர்வு முன்கூட்டியே நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இறுதித் தேர்வு முன்கூட்டியே நடத்தப்பட உள்ளது. அதன்படி ஏப்ரல் 2ம் தேதி தேர்வு தொடங்கி 12ஆம் தேதி […]

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கான இறுதித் தேர்வு முன்கூட்டியே நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இறுதித் தேர்வு முன்கூட்டியே நடத்தப்பட உள்ளது. அதன்படி ஏப்ரல் 2ம் தேதி தேர்வு தொடங்கி 12ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. 13ஆம் தேதி முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறை விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 23 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை தேர்வு முடிவுகள் வெளியிடும் பணியும், அடுத்த ஆண்டிற்கான கல்வி சேர்க்கை பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. 26.04. 2024 அன்று இந்த கல்வி ஆண்டின் கடைசி வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோடை விடுமுறை விடுத்து பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu