தனது வாகன டீலர்களுக்கு நிதி சேவைகளை வழங்க, அசோக் லேலண்ட் நிறுவனம், ஐடிபிஐ வங்கியுடன் இணைந்து ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. அண்மையில், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களும் கையெழுத்திட்டு உள்ளன. அதன்படி, அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட வாகன டீலர்கள், தங்களுக்கு தேவைப்படும் நிதி சேவைகள் மற்றும் உதவிகளை ஐடிபிஐ வங்கி மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம், தனது வர்த்தகத்தில் நீடித்த மற்றும் தடையில்லா விற்பனையை எட்ட முடியும் என்று நம்புவதாக அசோக் லேலண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.