ஜம்மு காஷ்மீரில் முதல் கட்ட வாக்கு பதிவு நிறைவு பெற்றது.
ஜம்மு காஷ்மீரில் 90 தொகுதிகளுக்கான தேர்தல் 3 கட்டங்களில் நடைபெற இருக்கின்றது. முதல் கட்ட தேர்தல், நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதன் முதல் கட்டத்தில் 24 தொகுதிகள் உள்ளன, இதில் 61% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி கிஷ்ட்வாரில் 77.23% அதிக வாக்குகளும், புல்வாமாவில் 46.03% குறைந்த வாக்குகளும் பதிவாகியுள்ளது.