நீருக்கடியிலான முதல் சுரங்க மெட்ரோ ரயில் சேவை மார்ச் 6 அன்று திறப்பு

இந்தியாவிலேயே முதல் நீருக்கடியிலான சுரங்க மெட்ரோ பாதையை பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 6 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். மெட்ரோ ரயில் சேவை திட்டங்களில் ஒன்றான இந்தியாவின் முதல் நீருக்கு அடியிலான சுரங்க மெட்ரோ பாதையை பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 6ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்க இருப்பதாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்த சுரங்க பாதை நதிக்கு அடியில் ரயில்களில் பயணிக்கும் புதிய அனுபவத்தை தர உள்ளது. இந்த சுரங்கப்பாதை 520 மீட்டர் […]

இந்தியாவிலேயே முதல் நீருக்கடியிலான சுரங்க மெட்ரோ பாதையை பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 6 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

மெட்ரோ ரயில் சேவை திட்டங்களில் ஒன்றான இந்தியாவின் முதல் நீருக்கு அடியிலான சுரங்க மெட்ரோ பாதையை பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 6ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்க இருப்பதாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்த சுரங்க பாதை நதிக்கு அடியில் ரயில்களில் பயணிக்கும் புதிய அனுபவத்தை தர உள்ளது. இந்த சுரங்கப்பாதை 520 மீட்டர் நீளத்திற்கு அமைந்துள்ளது. இதன் உள்விட்டம் 5.55 மீட்டராகும். வெளி விட்டம் 6.1 மீட்டராகும்.
ஹுக்ளி நதியில் 32 மீட்டருக்கு கீழே இதை உருவாக்கியுள்ளனர். இந்த சேவை நடைமுறைக்கு வந்ததும் இந்தியாவிலேயே ஆழமான மெட்ரோ சேவை தரும் ரயில் நிலையமாக ஹவுரா ரயில் நிலையம் உருப்பெறும். மேலும் ஒரு நதியின் கீழ் செயல்படும் முதல் மெட்ரோ ரயில் சேவை ஆகவும் இது விளங்குகின்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu