இந்திய ரயில்வேயின் தற்போதைய தலைமை அதிகாரி அனில் குமார் லஹோட்டி விரைவில் ஓய்வு பெற இருப்பதால் இந்த பதவிக்கு ஜெயவர்மா சின்ஹா என்பவரை இந்திய அரசாங்கம் தேர்வு செய்துள்ளது.
இந்திய ரயில்வேயின் ஒட்டு மொத்த நிர்வாகத்திற்கும் பொறுப்பானவர்கள் வகிக்கும் பதவி சக்தி வாய்ந்ததாகவும், பெருமையானதாகவும் கருதப்படும். இந்த பதவிக்கு ரயில்வேயின் செயலாக்கம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கான அமைப்பில் உறுப்பினராக இருக்கும் ஜெயவர்மா சிந்தா என்பவரை இந்திய அரசாங்கம் தேர்வு செய்துள்ளது. இதனை அரசாங்கத்தின் நியமணங்களுக்கான கேபினெட்டும் உறுதி செய்துள்ளது.
இந்த உயர்த்த பதவியை ஏற்கும் முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் செப்டம்பர் 1 அல்லது அதற்கு பிறகு பொறுப்பேற்க உள்ளார்.பின்னர் ஆகஸ்ட் 31, 2024 வரை இந்த பதவியில் இவர் வகிப்பார். இந்திய ரயில்வே டிராபிக் சேவையில் 1988- இல் சேர்ந்தார். ஜெய வர்மா அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். இவர் வடக்கு ரயில்வே, கிழக்கு ரயில்வே மற்றும் தென்கிழக்கு ரயில்வேயில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர். இந்தியாவின் அண்டை நாடு வங்காளதேசத்தின் ரயில்வே சேவைக்கு ஆலோசராகவும் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.