பிரதமர் மோடி சென்னை வருவதை ஒட்டி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

பிரதமர் நரேந்திர மோடி இன்று கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு செல்ல உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக தமிழகத்திற்கு நாளை மீண்டும் வருகிறார். மேலும் தேர்தல் பிரச்சாரத்திற்காக அடிக்கடி வருகை தரும் இவர் சென்னையில் பிரமாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். இதற்காக மகாராஷ்டிராவில் இருந்து இன்று மதியம் 1:15 மணியளவில் புறப்பட்டு சென்னை விமான நிலையத்திற்கு வருகை தருகிறார். பின்னர் ஹெலிகாப்டரில் இருந்து கல்பாக்கம் […]

பிரதமர் நரேந்திர மோடி இன்று கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு செல்ல உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக தமிழகத்திற்கு நாளை மீண்டும் வருகிறார். மேலும் தேர்தல் பிரச்சாரத்திற்காக அடிக்கடி வருகை தரும் இவர் சென்னையில் பிரமாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். இதற்காக மகாராஷ்டிராவில் இருந்து இன்று மதியம் 1:15 மணியளவில் புறப்பட்டு சென்னை விமான நிலையத்திற்கு வருகை தருகிறார். பின்னர் ஹெலிகாப்டரில் இருந்து கல்பாக்கம் சென்றடைகிறார்
அங்கு 400 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, நந்தனம் ஒய்.எம்.சி. ஏ திடல் செல்கிறார். அங்கு பொதுக்கூட்டம் முடிவடைந்ததும் பிரதமர் மோடி நாளைய இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து தெலுங்கானாவிற்கு புறப்பட உள்ளார். இதனால் மாமல்லபுரம், கொக்கி மேடு, மெய்யூர், சட்ராஸ், புதுப்பட்டினம், உய்யாளி குப்பம் போன்ற 10 கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று மாலை 3 மணி முதல் நாளை 6 மணி வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu