துரித வர்த்தக சேவையை அறிமுகம் செய்யும் பிளிப்கார்ட்

March 8, 2024

பிரபல இணைய வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், துரித வர்த்தக சேவையில் கால் பதிக்க உள்ளது. ஜெப்டோ, பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் போன்ற நிறுவனங்களுக்கு நேரடி போட்டியாக இது இருக்கும் என கூறப்படுகிறது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் துரித வர்த்தக சேவை, அடுத்த 6 முதல் 8 வாரங்களுக்குள் தொடங்கும் என செய்தி வெளியாகியுள்ளது. பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் சேவைகள் தொடங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஆர்டர் செய்த 10 முதல் 15 நிமிடங்களுக்குள் பொருட்களை […]

பிரபல இணைய வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், துரித வர்த்தக சேவையில் கால் பதிக்க உள்ளது. ஜெப்டோ, பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் போன்ற நிறுவனங்களுக்கு நேரடி போட்டியாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் துரித வர்த்தக சேவை, அடுத்த 6 முதல் 8 வாரங்களுக்குள் தொடங்கும் என செய்தி வெளியாகியுள்ளது. பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் சேவைகள் தொடங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஆர்டர் செய்த 10 முதல் 15 நிமிடங்களுக்குள் பொருட்களை டெலிவரி செய்யும் முறையில் பிளிப்கார்ட் ஈடுபட உள்ளது. பிளிப்கார்ட் இணைய வர்த்தகத்தில் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் உள்ளனர். எனவே, இந்த நிறுவனத்தின் துரித வர்த்தக சேவை உடனடியாக கவனம் பெறும் என கூறப்படுகிறது. அதே வேளையில், ரிலையன்ஸ் மற்றும் கூகுள் கூட்டமைப்பில் துரித வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் டன்சோ நிறுவனம் எதிர்பார்த்த அளவு முன்னேற்றத்தை பதிவு செய்யவில்லை. அதனால், பிளிப்கார்ட் நிறுவனமும், சந்தையில் தனது இருப்பை தக்க வைக்க உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu