ஆந்திரா மற்றும் தெலுங்கானா வெள்ள நிவாரணத்திற்கு பவன் கல்யாண் ரூ.1 கோடி உதவியாக வழங்கியுள்ளார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சமீபத்திய கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெள்ள நிவாரணமாக, ஆந்திரா மாநிலத்திற்கு ரூ.1 கோடியையும், 400 பஞ்சாயத்துகளுக்கு ₹4 கோடியையும் பவன் கல்யாண் வழங்கியுள்ளார். தெலுங்கானா மாநிலத்திற்கும் ரூ.1 கோடியை நிவாரணமாக வழங்கியுள்ளார். தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் காசோலையை வழங்கிய பவன் கல்யாண், இதன் மூலம் பரவலான பாதிப்புகளை மிஞ்சவும், ஆவணங்களைச் சரிபார்க்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.