ஒகேனக்கலில் வெள்ள அபாய எச்சரிக்கை

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 74 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. அதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு வரும் உபரி நீர் அதிகரித்தும் குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அவ்வகையில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 74 ஆயிரம் கனஅடியாக […]

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 74 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. அதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு வரும் உபரி நீர் அதிகரித்தும் குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அவ்வகையில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 74 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் கர்நாடகா அணையிலிருந்து சுமார் ஒன்றரை லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருவதன் காரணமாக கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசல் இயக்கவும் குளிக்கவும் தொடர்ந்து 11 ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu