அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் புயல் - 7 பேர் பலி

May 18, 2024

அமெரிக்காவின் ஹவுஸ்டன் நகரத்தை புயல் தாக்கியதில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய நகரம் ஹவுஸ்டன். இங்கு நேற்று பலத்த புயல் வீசியது. இதைத் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் இந்த நகரமே வெள்ளக்காடாக மாறியது. பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்ததால் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் நேற்று இரவு 9 லட்சம் வீடுகளில் மின்சாரம் இன்றி மக்கள் தவித்தனர். இதற்கிடையே கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை நான்கு […]

அமெரிக்காவின் ஹவுஸ்டன் நகரத்தை புயல் தாக்கியதில் நான்கு பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய நகரம் ஹவுஸ்டன். இங்கு நேற்று பலத்த புயல் வீசியது. இதைத் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் இந்த நகரமே வெள்ளக்காடாக மாறியது. பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்ததால் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் நேற்று இரவு 9 லட்சம் வீடுகளில் மின்சாரம் இன்றி மக்கள் தவித்தனர்.

இதற்கிடையே கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை நான்கு பேர் பலியானதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நகரில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஹவுஸ்டன் நகரத்தில் இது இரண்டாவது முறையாக கடந்த ஒரே மாதத்தில் புயல் தாக்கியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu