சூடானில் வெள்ளம் - 32 பேர் பலி

August 6, 2024

சூடானில் வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக 32 பேர் பலியாகினர். 107 பேர் படுகாயம் அடைந்தனர். சூடான் நாட்டின் பல மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஏழு மாநிலங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 5575 வீடுகள் சேதம் அடைந்துள்ளன என்று அந்நாட்டின் சுகாதார இயக்குனராகம் தெரிவித்துள்ளது. இந்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். 107 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மக்கள் […]

சூடானில் வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக 32 பேர் பலியாகினர். 107 பேர் படுகாயம் அடைந்தனர்.

சூடான் நாட்டின் பல மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஏழு மாநிலங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 5575 வீடுகள் சேதம் அடைந்துள்ளன என்று அந்நாட்டின் சுகாதார இயக்குனராகம் தெரிவித்துள்ளது. இந்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். 107 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மக்கள் பலர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கஸ்சாலா, கார்ட்டூம், கேசிரா போன்ற மாகாணங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சில மாநிலங்களில் சுகாதார நிலையம் உள்ளது என்றபோதிலும் மழைக்கால தொற்று நோய்களை எதிர்த்து போராட சுகாதாரப் பணியாளர்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மக்கள் ஆற்றுக்கரையோரங்களில் இருந்து விலகி இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu