மகாராஷ்டிரா மாநிலத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரின் கருவுக்குள் மற்றொரு கரு உருவாவதால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புல்தானா மாவட்டத்தை சேர்ந்த 35 வார கர்ப்பிணி பெண் ஒருவர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது, "கருவுக்குள் கரு" என்ற அரிய பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த அரிதான சம்பவம் குறித்து மகப்பேறு மருத்துவர் பிரசாத் அகர்வால் தகவல் அளித்துள்ளார். 5 லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படும் இந்த பிரச்சனை உலகளவில் 200 பேருக்கு மட்டுமே நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் 10-15 பேர் இதை சந்தித்துள்ளனர். கருவின் வயிற்றில் கை, கால்கள் போன்ற அமைப்புகளுடன் இருக்கும் இந்த நிலையில், பாதுகாப்பான சிகிச்சைக்காக கர்ப்பிணி சத்ரபதி சாம்பாஜி நகர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.