தமிழகத்தில் முதன்முறையாக ஆன்லைனில் கட்டிட அனுமதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் 2500 சதுர அடி வரையுள்ள மனையில் 3500 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு உரிய கட்டிட அனுமதியை ஆன்லைன் மூலம் பெறும் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். மேலும் இத்திட்டத்தின் மூலம் பரிசீலனை மற்றும் கட்டமைப்பு வசதி கட்டணங்களில் இருந்து 100% விலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை www.onlineeppa.tn.gov.in என்ற இணையதள முகரியின் மூலம் விண்ணப்பதாரர் வழங்கும் விவரத்தின் அடிப்படையில் உடனடி அனுமதி கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக
விண்ணப்பதாரர் எந்த அலுவலகத்திற்கும் செல்ல வேண்டியது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டிடப் பணி நிறைவு பெற்றபின் பெற வேண்டிய முடிவு சான்று ஆகியவற்றிற்கும் விலக்கு போன்ற சலுகைகளும் இத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.