முதல்முறையாக ஏற்றுமதி முட்டைக்குத் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) விலை நிர்ணயம் செய்கிறது என தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் சிங்கராஜ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) நிர்ணயம் செய்யும் விலைக்கே பண்ணையாளர்கள், வியாபாரிகள் முட்டையை விற்பனை செய்யவேண்டும். தற்போது ஏற்றுமதி முட்டைக்கு முதல்முறையாக என்இசிசி விலை நிர்ணயம் செய்கிறது. சந்தை நிலவரத்தைப் பொறுத்து தினசரி முட்டை விலை நிர்ணயம் செய்யப்படும். நாமக்கல்லிலிருந்து முட்டை கொண்டு செல்லும் இடம் வரை போக்குவரத்து செலவைக் கணக்கிட்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த விலைக்கே பண்ணையாளர்கள் முட்டையை விற்பனை செய்ய வேண்டும். கோடை காலத்தில் முட்டை விலை குறைய வாய்ப்பில்லை என்றார்.