முதல்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 4 ஜி சிப் இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரை சேர்ந்த சிக்னல் ட்ரான் என்ற நிறுவனத்திடம் இருந்து 4ஜி கைபேசி நிலையம் இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 4 ஜி சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிப்பை சிக்னல் சிப் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது. முதல் முறையாக ராணுவ பயன்பாட்டுக்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சிப் பயன்படுத்தப்பட்டுள்ளதால், நாட்டின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ராணுவ பட்ஜெட்டின் நிதி மிகப்பெரிய அளவில் சேமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் ஏழு கிலோ எடை கொண்ட இந்த 4ஜி பெட்டியை எளிமையாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லலாம். ராணுவ வீரர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இது உயர்தர ஆடியோ மற்றும் வீடியோக்களை வயர்லெஸ் தொழில்நுட்பம் மூலம் வழங்குகிறது.