தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க பயணத்தின் போது, சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். குறிப்பாக, ஃபோர்டு நிறுவனத்துடன் நேரடியாக பேசி, தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்கும் வாய்ப்பை பற்றி ஆலோசனை செய்தார். இந்த முயற்சியின் பயனாக, ஃபோர்டு நிறுவனம், சென்னையில் மூடப்பட்ட ஃபோர்டு ஆலையில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க உள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் சுமார் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முதல்வரின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாக, சென்னை ஃபோர்டு ஆலை மீண்டும் இயக்கப்படும் நிகழ்வு பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு ஃபோர்டு உற்பத்தி புத்துணர்ச்சியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.