ஃபோர்டு தொழிற்சாலைக்கு 2028 வரை செயல்படும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஃபோர்டு நிறுவனத்தின் கோரிக்கையின் அடிப்படையில், மறைமலை நகரத்தில் உள்ள தொழிற்சாலையின் இசைவு ஆணையை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் புதுப்பித்து வழங்கியுள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்த ஆணை காலாவதியானது, அதற்கு மாற்றாக 31.3.2028 வரை புதுப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் இந்த தொழிற்சாலை கடந்த 2021-ல் ஃபோர்டு தனது உற்பத்தியை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.