இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத உயர்வு

April 15, 2024

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத உயர்வை பதிவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் 5ம் தேதி நிலவரப்படி, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64856.2 கோடி டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத அதிகபட்ச கையிருப்பு என்று மத்திய ரிசர்வ் வங்கி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னதாக, கடந்த 2021 அக்டோபரில், 64245.3 கோடி டாலர்களாக பதிவானதே அதிகபட்ச கையிருப்பாக இருந்தது. மேலும், ஏப்ரல் ஐந்தாம் தேதி நிலவரப்படி, இந்தியாவின் மொத்த தங்கம் […]

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத உயர்வை பதிவு செய்துள்ளது.

கடந்த ஏப்ரல் 5ம் தேதி நிலவரப்படி, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64856.2 கோடி டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத அதிகபட்ச கையிருப்பு என்று மத்திய ரிசர்வ் வங்கி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னதாக, கடந்த 2021 அக்டோபரில், 64245.3 கோடி டாலர்களாக பதிவானதே அதிகபட்ச கையிருப்பாக இருந்தது. மேலும், ஏப்ரல் ஐந்தாம் தேதி நிலவரப்படி, இந்தியாவின் மொத்த தங்கம் கையிருப்பு 5455.8 கோடி டாலர்களாக உள்ளது. மேலும், எஸ் டி ஆர் எனப்படும் சிறப்பு வரைதல் உரிமைகள் 1817 கோடி டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தில் உள்ள இந்தியாவின் கையிருப்பு 466.9 கோடி டாலர்களாக உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu