சீனாவில் இருந்து திரும்பப் பெறப்பட்ட அந்நிய முதலீடுகள் வரலாற்று உச்சம்

August 12, 2024

கடந்த காலாண்டில் சீனாவிலிருந்து 15 பில்லியன் டாலர்களை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர். இது, சீனாவின் பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் நிலைமை குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. சீனாவின் நேரடி முதலீட்டு பொறுப்புகள் எதிர்மறையாக மாறியது இது இரண்டாவது முறையாகும். மேலும் இந்த போக்கு தொடர்ந்தால் நிகர வெளியேற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், மின் வாகனங்கள் (EV) மற்றும் பேட்டரி உற்பத்தித் துறைகளில் மட்டும் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளன. கடந்த 2021ல் சீனாவுக்கான அந்நிய […]

கடந்த காலாண்டில் சீனாவிலிருந்து 15 பில்லியன் டாலர்களை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர். இது, சீனாவின் பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் நிலைமை குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. சீனாவின் நேரடி முதலீட்டு பொறுப்புகள் எதிர்மறையாக மாறியது இது இரண்டாவது முறையாகும். மேலும் இந்த போக்கு தொடர்ந்தால் நிகர வெளியேற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், மின் வாகனங்கள் (EV) மற்றும் பேட்டரி உற்பத்தித் துறைகளில் மட்டும் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளன. கடந்த 2021ல் சீனாவுக்கான அந்நிய முதலீடு உச்சத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் பூஜ்ஜிய கோவிட் கொள்கை, சொத்துச் சந்தை சிக்கல்கள் மற்றும் அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் போன்ற காரணிகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குறைத்துள்ளன. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான தொடர்ச்சியான பதட்டங்கள் காரணமாக, வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்ய தயங்குகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதால், முதலீட்டாளர்கள் அதிக வருமானம் கிடைக்கும் நாடுகளில் முதலீடு செய்கின்றனர். இருப்பினும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க, சீனா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu