இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் 

December 15, 2022

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் புதன்கிழமை கலந்து கொண்டார். காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிறார். தமிழகத்தின் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்ட்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக சென்று தற்போது ராஜஸ்தானை கடந்து […]

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் புதன்கிழமை கலந்து கொண்டார்.

காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிறார். தமிழகத்தின் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்ட்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக சென்று தற்போது ராஜஸ்தானை கடந்து வருகிறது. இந்த யாத்திரை அடுத்த ஆண்டு காஷ்மீரில் நிறைவடைய இருக்கிறது.

இந்த யாத்திரை தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் சவாய் மாதோபூரின் படோதி பகுதியில் இருந்து புதன்கிழமை மீண்டும் தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரையில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கலந்து கொண்டு ராகுல் காந்தியுடன் சிறிது தூரம் நடந்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu