மேற்கு வங்காள முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா இன்று காலமானார்.
மேற்கு வங்காள முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா இன்று காலை காலமானார். அவருக்கு வயது 80. அவர் சில காலமாக உடல்நிலை குன்றி இருந்தார். சுவாசக் கோளாறு காரணமாக அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஆண்டு நிமோனியாவில் பாதிக்கப்பட்டவர் உயிர் காக்கும் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை 8:20 மணி அளவில் கொல்கத்தாவில் உள்ள அவருடைய இல்லத்தில் உயிர் பிரிந்தது. 2001 ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இரண்டு முறை புத்ததேவ் முதல் மந்திரியாக பதவி வகித்தார்.