ராணிப்பேட்டையில் 1231 ஏக்கர் பரப்பில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் 1231 ஏக்கர் பரப்பளவிலான புதிய சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் டாடா மோட்டார்ஸ் குழுமத்துக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, 470 ஏக்கர் பரப்பில் ரூ.9000 கோடி முதலீட்டில் புதிய கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டும் விழா, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த புதிய தொழிற்சாலையில் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதில் 5,000 பேருக்கு நேரடியாக வேலை கிடைக்கும். இந்த தொழிற்சாலையில், எலக்ட்ரிக் மற்றும் பெட்ரோல், டீசல் கார்களை உற்பத்தி செய்யவும், உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் திட்டமிட்டுள்ளது.