ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய உற்பத்தியாளராக பாக்ஸ்கான் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் தோற்றுநர் டெர்ரி கோவ், தைவான் அதிபர் போட்டியில் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
வரும் ஜனவரி மாதத்தில், தைவான் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதனை ஒட்டி, சுயேட்சை வேட்பாளராக களம் இறங்க உள்ளதாக டெர்ரி கோவ் அறிவித்துள்ளார். முன்னதாக, கடந்த 2019 ஆம் ஆண்டு, பாக்ஸ்கான் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிய அவர், தைவானின் எதிர்க்கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக களம் இறங்க இருந்தார். ஆனால், கட்சி அளவில் நடைபெற்ற அதிபர் வேட்பாளர் தேர்ந்தெடுப்புக்கான போட்டியில் அவர் தோல்வி அடைந்தார். எனவே, இந்த முறை, சுயேட்சையாக அவர் களமிறங்க உள்ளார். தைவானை பொறுத்தவரை, தற்போதைய ஆளும் கட்சி சுயாட்சியை விரும்புவதாகவும், எதிர்க்கட்சி சீனாவுடன் தொடர்பை விரும்புவதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.