செமிகண்டக்டர் துறையில் ஹெச் சி எல் மற்றும் பாக்ஸ்கான் கூட்டணி

January 18, 2024

தைவானை சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனமும் இந்தியாவின் ஹெச் சி எல் நிறுவனமும் ஒன்றிணைந்து செமி கண்டக்டர் ஆலை ஒன்றை அமைக்கிறது. இதற்கான பிணைப்பில்லா புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இரு நிறுவனங்களின் கூட்டணியில் அமையும் புதிய ஆலையில் பாக்ஸ்கான் நிறுவனம் 40% பங்குகளை பெறுகிறது. இதற்காக, 37.2 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்கிறது. ஹெச் சி எல் மற்றும் பாக்ஸ்கான் கூட்டணியில் அமைய உள்ள செமி கண்டக்டர் ஆலை மூலம் உள்ளூர்வாசிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் […]

தைவானை சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனமும் இந்தியாவின் ஹெச் சி எல் நிறுவனமும் ஒன்றிணைந்து செமி கண்டக்டர் ஆலை ஒன்றை அமைக்கிறது. இதற்கான பிணைப்பில்லா புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இரு நிறுவனங்களின் கூட்டணியில் அமையும் புதிய ஆலையில் பாக்ஸ்கான் நிறுவனம் 40% பங்குகளை பெறுகிறது. இதற்காக, 37.2 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்கிறது.

ஹெச் சி எல் மற்றும் பாக்ஸ்கான் கூட்டணியில் அமைய உள்ள செமி கண்டக்டர் ஆலை மூலம் உள்ளூர்வாசிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆலையில், செமி கண்டக்டர் பொருட்கள் அசெம்பிள் செய்யப்பட்டு சோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் நிறுவனம் வேதாந்தா குழுமத்துடன் இணைய இருந்தது. ஆனால், இறுதி கட்டத்தில், கூட்டணி முறிந்தது. இந்த நிலையில், ஹெச் சி எல் மற்றும் பாக்ஸ்கான் கூட்டணி தீர்மானம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu