பிரான்சில் கருக்கலைப்பு அரசியலமைப்பு உரிமையானது

March 5, 2024

பெண்களுக்கான கருக்கலைப்பு உரிமை சட்ட மசோதா பிரான்ஸ் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக இனி கருக்கலைப்பு செய்ய அனுமதி தேவை இல்லை. பெரும்பாலான நாடுகள் கருகலைப்பிற்கு எதிராக இருந்து வருகிறது. இந்நிலையில் கருக்கலைப்பு பெண்களுக்கான அரசியல் அமைப்பு உரிமை கொடுத்த முதல் நாடு என்ற பெயரை பிரான்ஸ் நாடு பெற்றுள்ளது. இந்த சட்ட மசோதாவிற்கு ஆதரவாக 780 வாக்குகள் விழுந்தன. எதிராக 72 வாக்குகள் பதிவாகின. இது தொடர்பாக பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல் கூறுகையில், பெண்களுக்காக […]

பெண்களுக்கான கருக்கலைப்பு உரிமை சட்ட மசோதா பிரான்ஸ் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதன் காரணமாக இனி கருக்கலைப்பு செய்ய அனுமதி தேவை இல்லை. பெரும்பாலான நாடுகள் கருகலைப்பிற்கு எதிராக இருந்து வருகிறது. இந்நிலையில் கருக்கலைப்பு பெண்களுக்கான அரசியல் அமைப்பு உரிமை கொடுத்த முதல் நாடு என்ற பெயரை பிரான்ஸ் நாடு பெற்றுள்ளது. இந்த சட்ட மசோதாவிற்கு ஆதரவாக 780 வாக்குகள் விழுந்தன. எதிராக 72 வாக்குகள் பதிவாகின. இது தொடர்பாக பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல் கூறுகையில், பெண்களுக்காக ஒரு செய்தி கூற விரும்புகிறோம். உங்களுடைய உடல் உங்களுக்கானதாக இருக்கிறது. எனவே உங்களுக்காக யாரும் முடிவு செய்ய முடியாது எனக் கூறியுள்ளார்.

இந்த மசோதா நிறைவேற்றம் அடைந்ததால் கருக்கலைப்புக்கு ஆதரவானோர் பிரான்ஸ் ஈபில் டவர் முன் கூடி தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் மேலும் என்னுடைய உடல் என்னுடைய தேர்வு என்ற வாசகத்தை வெளிப்படுத்தினர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu