பிரான்ஸ் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
செல்போன் பயன்படுத்துவதால் மாணவர்களுக்கு தூக்கமின்மை, கவனக்குறைவு போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன. இதைத் தவிர்க்க உலக நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுள்ளன. அதில், சுவீடன் அரசு 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செல்போன்களை பயன்படுத்த பெற்றோர் அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. இதேபோல், பிரான்சில் அரசு நடுநிலைப்பள்ளியில் உள்ள 11 முதல் 15 வயது வரை உள்ள மாணவர்கள் செல்போன் கொண்டு செல்லக் கூடாது என புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை மீறினால், ஆசிரியர்கள் மாணவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்யலாம். இதன் பின்னர், உயர் நிலை வகுப்புகளுக்கு இந்த திட்டத்தை விரிவாக்க செய்ய அரசாங்கம் ஆலோசிக்கிறது.