இலவச கொத்தமல்லி திட்டத்தை அறிமுகம் செய்த பிளிங்கிட்

ஜொமாட்டோ நிறுவனத்தின் துரித வர்த்தக கிளை பிளிங்கிட் ஆகும். இந்த செயலி மூலம் காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வாங்கி வருகின்றனர். இந்த சூழலில், காய்கறிகள் வாங்கினால் கொத்தமல்லியை இலவசமாக வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பொதுவாக, இந்திய காய்கறி கடைகளில் காய்கறிகள் வாங்கினால், கொத்தமல்லி, கருவேப்பிலை, மிளகாய் போன்றவற்றை இலவசமாக வழங்குவதுண்டு. அதன்படி, இணைய வழி காய்கறி விற்பனையிலும் இந்த நடைமுறையை பிளிங்கிட் கொண்டு வருகிறது. அண்மையில், அங்கித் என்பவர், எக்ஸ் தளத்தில் ‘கொத்தமல்லியை காசு […]

ஜொமாட்டோ நிறுவனத்தின் துரித வர்த்தக கிளை பிளிங்கிட் ஆகும். இந்த செயலி மூலம் காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வாங்கி வருகின்றனர். இந்த சூழலில், காய்கறிகள் வாங்கினால் கொத்தமல்லியை இலவசமாக வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பொதுவாக, இந்திய காய்கறி கடைகளில் காய்கறிகள் வாங்கினால், கொத்தமல்லி, கருவேப்பிலை, மிளகாய் போன்றவற்றை இலவசமாக வழங்குவதுண்டு. அதன்படி, இணைய வழி காய்கறி விற்பனையிலும் இந்த நடைமுறையை பிளிங்கிட் கொண்டு வருகிறது. அண்மையில், அங்கித் என்பவர், எக்ஸ் தளத்தில் ‘கொத்தமல்லியை காசு கொடுத்து வாங்க வேண்டுமா’ என்று தனது அம்மா ஆச்சரியம் அடைந்ததாக பதிவிட்டிருந்தார். இந்த பதிவு பல்வேறு வாதங்களை எழுப்பி, பிளிங்கிட் தலைமை செயல் அதிகாரி காதுகளுக்கு சென்றடைந்தது. அதன்படி, இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்துவதாக அறிவித்துள்ளார். ஆனால், குறைந்தபட்ச ஆர்டர் தொகை அல்லது குறைந்தபட்ச காய்கறி அளவு இருந்தால் மட்டுமே இது இலவசமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu