அரசு பள்ளி மாணவியருக்கு 'சானிட்டரி நாப்கின்' இலவசமாக வழங்க வேண்டும் என்ற பொதுநல மனுவுக்கு பதில் அளிக்கக் கோரி, மத்திய - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த டாக்டர் ஜெயா தாக்குர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவியருக்கு அரசு இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த கோரிக்கை குறித்து பதில் அளிக்க, மத்திய - மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.