உத்தர பிரதேசம் மாநிலம் மதுராவில், பிருந்தாவன் ரோட்டில் சரக்கு ரெயிலின் 15 பெட்டிகள் தடம் புரண்டு விபத்தில் சிக்கியுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் மதுராவில், பிருந்தாவன் ரோட்டில் சரக்கு ரெயிலின் 15 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து, டெல்லிக்கு செல்லும் 15 ரெயில் சேவைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.