100% பழச்சாறு லேபிளை நீக்க fssai உத்தரவு

பேக்கேஜ் செய்யப்பட்ட பழச்சாறுகளை விற்கும் நிறுவனங்கள் அதன் லேபில்களில் ‘100% பழச்சாறு’ என்று குறிப்பிடுவதை நீக்க வேண்டும் என உணவு கட்டுப்பாட்டு மற்றும் தர நிர்ணய ஆணையம் fssai உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு முன் அனைத்து விதமான பேக்கேஜ் பழச்சாறுகளில் 100% பழச்சாறு என்ற லேபிள் நீக்கப்பட வேண்டும். பழச்சாறுகளுடன் வேறு பல பொருட்களை இணைத்து, பல்வேறு பேக்கேஜ் பழச்சாறுகள் சந்தையில் விற்கப்பட்டு […]

பேக்கேஜ் செய்யப்பட்ட பழச்சாறுகளை விற்கும் நிறுவனங்கள் அதன் லேபில்களில் ‘100% பழச்சாறு’ என்று குறிப்பிடுவதை நீக்க வேண்டும் என உணவு கட்டுப்பாட்டு மற்றும் தர நிர்ணய ஆணையம் fssai உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு முன் அனைத்து விதமான பேக்கேஜ் பழச்சாறுகளில் 100% பழச்சாறு என்ற லேபிள் நீக்கப்பட வேண்டும்.

பழச்சாறுகளுடன் வேறு பல பொருட்களை இணைத்து, பல்வேறு பேக்கேஜ் பழச்சாறுகள் சந்தையில் விற்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான தயாரிப்புகளில் 100% பழச்சாறு என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், “100% பழச்சாறை பாக்கெட் செய்யப்பட்டு விற்க முடியாது” என்று கூறியுள்ள fssai, அவ்வாறு குறிப்பிடுவதை நிறுத்த உத்தரவிட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களை தவறாக வழி நடத்தி பொருளை வாங்க வைப்பதற்கான விளம்பர யுக்தி என விமர்சித்துள்ளது. மாறாக, “ஸ்வீட்டண்ட் ஜூஸ்” அதாவது “இனிப்பு சேர்த்த பழச்சாறு” அல்லது “சுவையூட்டப்பட்ட பழச்சாறு” என்று குறிப்பிட உத்தரவிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu