காந்திகிராம பல்கலைக்கழக பேராசிரியர்கள் உலக விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்.

August 24, 2023

அமெரிக்காவில் உள்ள ஸ்டாண்டர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் உலகின் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலை வெளியிட்டார்கள். இதில் இந்தியாவில் இருந்து 3500 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இடம் பெற்றுள்ளனர். இதில் காந்திகிராம பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் பேராசிரியர் பாலசுப்ரமணியம் கணிதத்துறை பேராசிரியர்,தெளிவற்ற தர்க்கக அணுக முறை பயன்படுத்தி தரம் குறைந்த படங்களை உயர்தர படமாக மாற்றும்,செயலாக்க தொழில்நுட்பம் மூலம் நோயாளியின் மூலையில் ஏற்படும் அதிர்ச்சியை கண்டறியும் முறை சார்ந்த ஆய்வுகளை […]

அமெரிக்காவில் உள்ள ஸ்டாண்டர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் உலகின் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலை வெளியிட்டார்கள். இதில் இந்தியாவில் இருந்து 3500 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இடம் பெற்றுள்ளனர். இதில் காந்திகிராம பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதில் பேராசிரியர் பாலசுப்ரமணியம் கணிதத்துறை பேராசிரியர்,தெளிவற்ற தர்க்கக அணுக முறை பயன்படுத்தி தரம் குறைந்த படங்களை உயர்தர படமாக மாற்றும்,செயலாக்க தொழில்நுட்பம் மூலம் நோயாளியின் மூலையில் ஏற்படும் அதிர்ச்சியை கண்டறியும் முறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
எம்.ஜி சேதுராமன் வேதியியல் துறை பேராசிரியர், தாவர மூலப்பொருள்களில் இருந்து வரும் சேர்மங்களை கொண்டு உலோக அரிப்புகளை தடுக்கும் காரணிகளை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றார். எஸ். மீனாட்சி வேதியியல் துறை பேராசிரியை கழிவு நீரிலிருந்து நச்சு தன்மையுள்ள ப்ளுரைடு,காரியம், குரோமியம்,பாதரசம் மற்றும் நச்சுக்களை உருஞ்சுதல் மூலமாக நீக்கும் முறைகளை உருவாக்கும் ஆய்வில் உள்ளார். இயற்பியல் துறை பேராசிரியர் கே. மாரிமுத்து பூமியின் அரிய வகை தாதுக்களை கொண்டு தயாரிக்கப்படும் கண்ணாடிகள் மூலம் வெள்ளை ஒளி மற்றும் லேசர் வழி உமிழ்வதற்கான ஆய்வு மற்றும் அபாய கதிர்வீச்சை தடுப்பதற்கான கண்ணாடிகளை உருவாக்கும் முயற்சியில் உள்ளார். இவர்கள் 2019, 2020, 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்த நிலையிலும் நான்காவது முறையாக மீண்டும் 2022 ஆம் ஆண்டு இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu