நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் 48 மணி நேரத்தில் போர் நிறுத்தம் - ஹமாஸ்

March 4, 2024

இஸ்ரேல் தங்கள் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் 48 மணி நேரத்திற்குள் காசா போர் நிறுத்தப்படும் சாத்தியம் உள்ளது என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் எகிப்து எல்லையை ஒட்டிய ரஃபா நகரில் தாக்குதல் நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது. காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சுமார் 90 பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் இதுவரை இந்த போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30,410 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், […]

இஸ்ரேல் தங்கள் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் 48 மணி நேரத்திற்குள் காசா போர் நிறுத்தப்படும் சாத்தியம் உள்ளது என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் எகிப்து எல்லையை ஒட்டிய ரஃபா நகரில் தாக்குதல் நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது. காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சுமார் 90 பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் இதுவரை இந்த போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30,410 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தங்கள் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் 48 மணி நேரத்திற்குள் காசா போரை நிறுத்தும் சாத்தியம் உள்ளது என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, இடம் பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவிற்கு திரும்ப வேண்டும். அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்யப்பட வேண்டும் போன்ற நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டால் போர் நிறுத்தம் சாத்தியம் என்று தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu