காசாவில் குழந்தைகளுக்கு போலியோ அபாயம் - உலக சுகாதார அமைப்பு

July 31, 2024

காசாவில் உள்ள குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. காசா போரினால் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தவிக்கின்றனர். இந்நிலையில் காசாவில் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், சமீபத்தில் காசாவில் கழிவு நீர் மாதிரிகளில் தொற்றுநோய் இருப்பது அறியப்பட்டுள்ளது. அதையடுத்து காசாவிற்கு ஒரு மில்லியன் போலியோ தடுப்பூசிகளை […]

காசாவில் உள்ள குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

காசா போரினால் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தவிக்கின்றனர். இந்நிலையில் காசாவில் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், சமீபத்தில் காசாவில் கழிவு நீர் மாதிரிகளில் தொற்றுநோய் இருப்பது அறியப்பட்டுள்ளது. அதையடுத்து காசாவிற்கு ஒரு மில்லியன் போலியோ தடுப்பூசிகளை அனுப்பியுள்ளோம். இந்த தடுப்பூசிகள் குழந்தைகளை சென்றடைய வேண்டுமானால் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும். இதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்றார். இது குறித்து காசாவின் சுகாதார அமைச்சகம் கூறுகையில், போலியோ தொற்றுநோய் பரவுவதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu