அமெரிக்காவின் தனியார் கார் உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் (ஜிஎம்) சீனாவில் தனது செயல்பாடுகளை மாற்றியமைக்க உள்ளது. விற்பனை குறைந்ததை தொடர்ந்து ஊழியர்களை குறைத்து, உற்பத்தி திறனை வெட்டிக் குறைக்க திட்டமிட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு உச்சத்தை எட்டிய சீன சந்தையில் ஜிஎம்-ன் விற்பனை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால், போட்டியை சமாளிக்க உயர்தர எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் பிரீமியம் இறக்குமதி வாகனங்களில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. SAIC உடன் ஜிஎம் இணைந்து செயல்படும் கூட்டு நிறுவனத்தின் விற்பனை கடந்த காலாண்டில் 29% குறைந்துள்ளது. சமீபத்தில் சீனாவில் ஜிஎம் நிறுவனம் 104 மில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளது. மலிவு விலை எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் SAIC-GM-Wuling கூட்டு நிறுவனம் நல்ல நிலையில் உள்ளது. வரும் 2027 ஆம் ஆண்டு முடிவடையும் SAIC உடனான 30 ஆண்டு ஒப்பந்தத்திற்கு முன்பாக லாபத்தை ஈட்டும் நோக்கில் ஜிஎம் இந்த பணி நீக்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது.