ஹைதராபாத்தில் லாட் பஜாரில் விற்பனை செய்யப்படும் லாக் வகை வளையல்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.
புவிசார் குறியீடு என்பது ஒவ்வொரு வட்டார பகுதியில் உற்பத்தியாக கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கொண்டு அதற்கான சட்ட பாதுகாப்பு வழங்கும் நடைமுறையாகும். அதன் வகையில் தமிழகத்தில் மதுரை மல்லி, ஆத்தூர் வெற்றிலை, வீரவநல்லூர் செடி புட்டா சேலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு இதுவரை மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. அவ்வகையில் தற்போது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் லாட் பஜாரில் விற்பனை செய்யப்படும் லாக் வகை வலையல்களுக்கு இந்த புவிசார் குறியீடு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தெலுங்கானாவில் புவிசார் குறியீடு பெரும் 17 ஆவது பொருளாக இந்த வளையல் இடம் பெற்று உள்ளது.