ஜெர்மனியில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முற்றுகை - 140 விமானங்கள் ரத்து

July 26, 2024

ஜெர்மனியில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விமான நிலையத்தின் ஓடுபாதையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக சுமார் 140 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. காலநிலை மாற்றம் தற்போது உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. எனவே 2030 ஆம் ஆண்டுக்குள் எண்ணெய், எரிவாய் மற்றும் நிலக்கரி பயன்பாட்டில் இருந்து வெளியேறுவது குறித்து சர்வதேச ஒப்பந்தத்தில் ஜெர்மனி கையெழுத்திட வேண்டும் என்று அங்குள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இந்நிலையில் லாஸ்ட் ஜெனரேஷன் என்ற சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அங்கு […]

ஜெர்மனியில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விமான நிலையத்தின் ஓடுபாதையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக சுமார் 140 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

காலநிலை மாற்றம் தற்போது உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. எனவே 2030 ஆம் ஆண்டுக்குள் எண்ணெய், எரிவாய் மற்றும் நிலக்கரி பயன்பாட்டில் இருந்து வெளியேறுவது குறித்து சர்வதேச ஒப்பந்தத்தில் ஜெர்மனி கையெழுத்திட வேண்டும் என்று அங்குள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இந்நிலையில் லாஸ்ட் ஜெனரேஷன் என்ற சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அங்கு உள்ள பிராங்க் பார்ட்ஸ் விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர். பின்னர் அவர்கள் விமான நிலையத்தின் ஓடுபாதையை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். இதன் காரணமாக விமானங்கள் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து 140 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியுற்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu