217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட ஆச்சரிய மனிதர்

ஜெர்மனியை சேர்ந்த 62 வயதாகும் நபர் ஒருவர் 217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். மேலும், அவர் நலமுடன் உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் மருத்துவ உலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2021 ஜூன் மாதத்தில் முதல் முறையாக அந்த நபர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். தொடர்ந்து, 4 நாட்கள் இடைவெளியில் தடுப்பூசி செலுத்தி வந்துள்ளார். அத்துடன், 8 வெவ்வேறு நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளார். ஆனாலும், அவரது உடலில் எந்தவித […]

ஜெர்மனியை சேர்ந்த 62 வயதாகும் நபர் ஒருவர் 217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். மேலும், அவர் நலமுடன் உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் மருத்துவ உலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2021 ஜூன் மாதத்தில் முதல் முறையாக அந்த நபர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். தொடர்ந்து, 4 நாட்கள் இடைவெளியில் தடுப்பூசி செலுத்தி வந்துள்ளார். அத்துடன், 8 வெவ்வேறு நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளார். ஆனாலும், அவரது உடலில் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. அத்துடன், நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கவோ குறையவோ இல்லை என கூறப்படுகிறது. அவரது உடல் அமைப்பு காரணமாக அவருக்கு இவ்வாறு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும், மற்றவர்களுக்கும் அவரைப் போல பாதிப்பு ஏற்படாது என எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளனர். தற்போது, கொரோனா தடுப்பூசியை எத்தனை முறை செலுத்திக் கொண்டாலும் ஒரே அளவிலான பாதுகாப்பு தான் கிடைக்கும் என கூறப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu