இறக்குமதிக்கான பணத்தை டாலருக்கு பதில் தங்கமாக கொடுக்கும் திட்டத்தில் கானா

November 26, 2022

எண்ணெய் பொருட்கள் இறக்குமதிக்கான தொகையை அமெரிக்க டாலருக்கு பதிலாக தங்கமாக கொடுக்கும் திட்டத்தில் இ௫ப்பதாக கானா நாட்டின் துணை ஜனாதிபதி மகாமுது பவுமியா தெரிவித்துள்ளார். மேற்கு ஆப்ரிக்க நாடான கானா 2017ல் ஏற்பட்ட விபத்து காரணமாக அதன் ஒரே சுத்திகரிப்பு ஆலை மூடப்பட்டது. அதிலி௫ந்து சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் தயாரிப்புகளுக்கான இறக்குமதியை நம்பியுள்ளது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரிப்பால் கானாவின் மொத்த அன்னிய செலாவணி கையிருப்பு, 6.6 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. எனவே இதனை […]

எண்ணெய் பொருட்கள் இறக்குமதிக்கான தொகையை அமெரிக்க டாலருக்கு பதிலாக தங்கமாக கொடுக்கும் திட்டத்தில் இ௫ப்பதாக கானா நாட்டின் துணை ஜனாதிபதி மகாமுது பவுமியா தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆப்ரிக்க நாடான கானா 2017ல் ஏற்பட்ட விபத்து காரணமாக அதன் ஒரே சுத்திகரிப்பு ஆலை மூடப்பட்டது. அதிலி௫ந்து சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் தயாரிப்புகளுக்கான இறக்குமதியை நம்பியுள்ளது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரிப்பால் கானாவின் மொத்த அன்னிய செலாவணி கையிருப்பு, 6.6 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. எனவே இதனை சமாளிக்கும் வகையில் இறக்குமதிக்கான தொகையை டாலருக்கு பதிலாக தங்கமாக கொடுக்கும் திட்டத்தை அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் அமல்படுத்தவுள்ளதாக ௯றியுள்ளார். மேலும் இதனால் உள்நாட்டு கரன்சியின் மதிப்பு சரிவது கணிசமாக குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.

1
2
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu