அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் வெப்பநிலை அதிகரிக்கும் - ஐ.நா

June 6, 2024

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் உலகின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை கடக்க 80 சதவீதம் வாய்ப்புள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரஸ் கூறியுள்ளார். அதிக மழையும், அதிக வெயிலும் உலகெங்கிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளன. காலநிலை மாற்றத்தின் தாக்கம் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வகையில் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் மட்டும் 250க்கும் அதிகமானோர் ஹீட் ஸ்ட்ரோக்கால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் […]

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் உலகின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை கடக்க 80 சதவீதம் வாய்ப்புள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரஸ் கூறியுள்ளார்.

அதிக மழையும், அதிக வெயிலும் உலகெங்கிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளன. காலநிலை மாற்றத்தின் தாக்கம் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வகையில் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் மட்டும் 250க்கும் அதிகமானோர் ஹீட் ஸ்ட்ரோக்கால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரஸ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த மே மாதம் உலகின் மிக வெப்பமான மாதமாக பதிவாகியுள்ளது. கடந்த 12 மாதங்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் உலகின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை கடக்க 80 சதவீதம் வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார். அவர் உலக வானிலை நிறுவனத்தின் கணிப்பை மேற்கோள் காட்டி இதை கூறியுள்ளார். பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் 2030 வரை உலகின் சராசரி வெப்பநிலை 1.5 செல்சியஸை கடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu