புவி வெப்பமயமாதலால் அண்டார்டிகா கண்டம் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. இதன் விளைவாக, ஆயிரக்கணக்கான பென்குயின்கள் அண்டார்டிகாவில் உயிரிழந்துள்ளன.
அண்டார்டிகா பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருவதால், அங்கு காணப்படும் அரிய வகை பென்குயின் வகைகள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, 2022 ஆம் ஆண்டில் மட்டும், கிட்டதட்ட 10,000 எம்பரர் பென்குயின்கள் இறந்துள்ளன. பெரும்பாலான பென்குயின்கள் சிறிய குஞ்சுகள் என்பதால், தண்ணீரில் நீந்துவதற்கான இறகுகள் முளைக்காத நிலையில் அவை உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அண்மையில் வெளியான ஆய்வறிக்கை ஒன்றில், நடப்பு நூற்றாண்டுக்குள் 90% எம்பரர் பென்குயின் காலனிகள் அழிந்து விடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.