கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் திவால் - இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்களுக்கு வாய்ப்பு

கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம், வரலாறு காணாத நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த நிறுவனம், கிட்டத்தட்ட திவால் நிலைக்கு சென்றுள்ளது. எனவே, இன்று முதல் அடுத்த 72 மணி நேரத்திற்கு, விமான சேவையை நிறுத்துவதாக கோ ஃபர்ஸ்ட் அறிவித்துள்ளது. கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் நிதி நிலை சீராகும் வரையில், விமான சேவையில் தடைகள் தொடரலாம் என்று கருதப்படுகிறது. எனவே, இந்தியாவின் மற்ற விமான சேவை நிறுவனங்களான இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் போன்ற விமான நிறுவனங்களுக்கு, இது நல்ல […]

கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம், வரலாறு காணாத நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த நிறுவனம், கிட்டத்தட்ட திவால் நிலைக்கு சென்றுள்ளது. எனவே, இன்று முதல் அடுத்த 72 மணி நேரத்திற்கு, விமான சேவையை நிறுத்துவதாக கோ ஃபர்ஸ்ட் அறிவித்துள்ளது. கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் நிதி நிலை சீராகும் வரையில், விமான சேவையில் தடைகள் தொடரலாம் என்று கருதப்படுகிறது. எனவே, இந்தியாவின் மற்ற விமான சேவை நிறுவனங்களான இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் போன்ற விமான நிறுவனங்களுக்கு, இது நல்ல வாய்ப்பாக அமையும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். கோ ஃபர்ஸ்ட் தீவாலான நிலையில், அதன் போட்டியாளராக கருதப்படும் இண்டிகோ நிறுவனத்தின் பங்கு மதிப்பு இன்று 8% வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் இந்த நிலைக்கு, அமெரிக்க விமான எஞ்சின் தயாரிப்பாளரான பிராட் அண்ட் வைட்னி நிறுவனமே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த நேரத்தில் இன்ஜின்களை டெலிவரி செய்யாததால், கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் 28 விமானங்கள் தரையிறக்கப்பட்டு, நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இது இந்திய மதிப்பில் 10800 கோடி ரூபாய் இழப்பை பெற்று தந்தது. எனவே, விமான இயக்கம் மூலமாக மட்டுமே வருவாய் பெற்று வந்த நிறுவனம், திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu