கடவுளின் கைகள் விண்மீன் கூட்டத்தை புகைப்படம் எடுத்த சிலி தொலைநோக்கி

கடவுளின் கைகள் என்று அழைக்கப்படும் விண்மீன் கூட்டத்தை சிலியில் உள்ள விக்டர் எம் பிளாங்கோ தொலைநோக்கி புகைப்படம் எடுத்துள்ளது. கடந்த மே 6 ஆம் தேதி, தொலைநோக்கியில் உள்ள ‘டார்க் எனர்ஜி கேமரா’ உதவியுடன் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 1300 ஒளி ஆண்டுகள் தொலைவில் சிஜே 4 என்று அழைக்கப்படும் விண்மீன் கூட்டம் உள்ளது. அடர்த்தியான வாயுக்கள் மற்றும் தூசுகளால் நிறைந்த இந்த விண்மீன் கூட்டத்தின் வடிவம் ஒளிரும் வால் நட்சத்திரத்தை போல உள்ளது. அதன் […]

கடவுளின் கைகள் என்று அழைக்கப்படும் விண்மீன் கூட்டத்தை சிலியில் உள்ள விக்டர் எம் பிளாங்கோ தொலைநோக்கி புகைப்படம் எடுத்துள்ளது. கடந்த மே 6 ஆம் தேதி, தொலைநோக்கியில் உள்ள ‘டார்க் எனர்ஜி கேமரா’ உதவியுடன் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

பூமியிலிருந்து 1300 ஒளி ஆண்டுகள் தொலைவில் சிஜே 4 என்று அழைக்கப்படும் விண்மீன் கூட்டம் உள்ளது. அடர்த்தியான வாயுக்கள் மற்றும் தூசுகளால் நிறைந்த இந்த விண்மீன் கூட்டத்தின் வடிவம் ஒளிரும் வால் நட்சத்திரத்தை போல உள்ளது. அதன் தலை பகுதி 1.5 ஒளி ஆண்டுகள் நீளத்துடனும், வால் பகுதி 8 ஒளி ஆண்டுகள் நீளத்துடனும் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமியிலிருந்து 10 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இ எஸ் ஓ 257-19 (பிஜிசி 21338) என்ற பால்வீதி மண்டலத்தை நோக்கி, விண்மீன் கூட்டத்தின் கை போன்ற அமைப்பு நீண்டுள்ளது. அதனால், ‘கடவுளின் கைகள்’ என விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறது. முதன் முதலில், கடவுளின் கைகள் 1976 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. அப்போது இருந்த தொழில்நுட்பத்தில், இது பற்றி ஆராய்வது சிரமமாக இருந்தது. ஆனால், தற்போது கிடைத்துள்ள புகைப்படம் இது பற்றிய துல்லியமான தகவல்களை அளித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu