தங்கம் விலை தொடர் உயர்வு - ஒரு பவுன் 50000 ஐ நெருங்குகிறது

March 7, 2024

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வரலாற்று உச்சபட்ச மதிப்பாக தங்கத்தின் விலை பதிவாகி வருகிறது. விரைவில் ஒரு பவுன் தங்கம் 50000 ரூபாயை கடக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு பவுன் தங்கம் 2200 ரூபாய் அளவில் உயர்ந்துள்ளது. இன்றைய நாளில் ஒரு கிராம் தங்கம் 6090 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பவுன் தங்கம் 48720 ரூபாய்க்கு விற்பனையாகிறது. […]

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வரலாற்று உச்சபட்ச மதிப்பாக தங்கத்தின் விலை பதிவாகி வருகிறது. விரைவில் ஒரு பவுன் தங்கம் 50000 ரூபாயை கடக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு பவுன் தங்கம் 2200 ரூபாய் அளவில் உயர்ந்துள்ளது. இன்றைய நாளில் ஒரு கிராம் தங்கம் 6090 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பவுன் தங்கம் 48720 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்படி, வார இறுதிக்குள், ஒரு பவுன் தங்கம் 50,000 ரூபாயை எட்டும் என தங்க நகை வியாபாரிகள் கணித்துள்ளனர். கடந்த ஜனவரி 22 முதல், தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 14.35% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன், சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் டாலருக்கு பதிலாக தங்கத்தை வாங்கி குவிப்பதும், அமெரிக்காவின் பண வீக்கம் கட்டுக்குள் இருப்பதும், தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எனவே, இனி வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை குறைவதற்கு வாய்ப்பில்லை என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu