தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. நேற்று 1 பவுன் தங்கம் ரூ.45, 720-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.45,360-க்கு விற்கப்படுகிறது. கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5, 670-க்கு விற்கப்படுகிறது. இதே போல் வெள்ளி விலையும் 60 காசுகள் குறைந்து ரூ.78.20-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.78, 200-க்கு விற்பனையாகிறது.