சிறந்த தேயிலைக்கான போட்டியில் ‘கண்ணன் தேவன்’ நிறுவனத்திற்கு 7 விருதுகள்

April 29, 2023

கடந்த 2005ஆம் ஆண்டு முதல், தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கம், தேயிலை வாரியம் ஆகியவை சார்பில், தென்மண்டல அளவில், ‘தங்க இலை’ விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தங்க இலை விருதுகள் சிறந்த தேயிலைக்காக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டியில், கண்ணன் தேவன் நிறுவனம் 7 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. நீலகிரி, கேரளா, வயநாடு, வால்பாறை, மூணாறு, கர்நாடகா போன்ற இடங்களைச் சேர்ந்த 33 நிறுவனங்களின், 115 வகை தேயிலைகள் இந்த ஆண்டு போட்டியில் கலந்து […]

கடந்த 2005ஆம் ஆண்டு முதல், தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கம், தேயிலை வாரியம் ஆகியவை சார்பில், தென்மண்டல அளவில், ‘தங்க இலை’ விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தங்க இலை விருதுகள் சிறந்த தேயிலைக்காக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டியில், கண்ணன் தேவன் நிறுவனம் 7 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

நீலகிரி, கேரளா, வயநாடு, வால்பாறை, மூணாறு, கர்நாடகா போன்ற இடங்களைச் சேர்ந்த 33 நிறுவனங்களின், 115 வகை தேயிலைகள் இந்த ஆண்டு போட்டியில் கலந்து கொண்டன. தேயிலைத் தூளின் தரம், மணம், சுவை போன்ற குணங்கள் ஆய்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்படுகிறது. போட்டியில், 62 தேயிலை தூள்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதியாக, கண்ணன் தேவன் நிறுவனத்திற்கு 7 விருதுகள் கிடைத்தது. அடுத்ததாக, பாரி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹரிசன்ஸ் மலையாளம் லிமிடெட் நிறுவனங்கள் தலா 4 விருதுகளை வென்றுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu